ரயில் முன்பதிவு பட்டியல் தயாரிப்பதில் புதிய மாற்றம்
செய்தி முன்னோட்டம்
ரயில் பயணிகளின் வசதிக்காக, ரயில் Reservation Chart தயாரிக்கும் விதிகளில் இந்திய ரயில்வே முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. தினமலர் மற்றும் பிற செய்தி நிறுவனங்களின் தகவல்படி, இதுவரை ரயில்கள் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாக முதல் முன்பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இனிமேல் இது 8 மணி நேரத்திற்கு முன்னதாகவே தயாரிக்கப்படும். காலை 5:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை புறப்படும் ரயில்கள்: ரயில் புறப்படுவதற்கு முந்தைய நாள் இரவு 8:00 மணிக்கே தயார் செய்யப்படும். மதியம் 2:01 மணி முதல் நள்ளிரவு 11:59 மணி வரை மற்றும் நள்ளிரவு முதல் அதிகாலை 5:00 மணி வரை புறப்படும் ரயில்கள்: 10 மணி நேரத்திற்கு முன்னதாகவே தயார் செய்யப்படும்.
காரணம்
ஏன் இந்த மாற்றம்?
காத்திருப்போர் பட்டியலில் (Waiting List) இருக்கும் பயணிகள், தங்களது டிக்கெட் உறுதியாகிவிட்டதா என்பதை முன்கூட்டியே அறிந்து, அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிட இந்த கால அவகாசம் உதவும். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இது பெரும் வசதியாக இருக்கும். இது தவிர, ரயில் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகளைத் தவிர்க்கவும், பொதுமக்களுக்கு எளிதாக டிக்கெட் கிடைக்கவும் மேலும் சில விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, தட்கல் டிக்கெட்டுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதோடு, ஏஜென்ட்கள் அல்லது கவுண்டர்களில் தட்கல் டிக்கெட் எடுக்கும்போது, பயணியின் மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.