ஆகஸ்ட் 12ம்தேதி முதல் 15ம்தேதி வரை, மகாபலிபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா
செய்தி முன்னோட்டம்
சென்னை மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவானது 2022ம்ஆண்டு முதல்முறையாக கொண்டாடப்பட்டது.
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக இந்த திருவிழா கடந்தாண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது 2ம் ஆண்டாக சர்வதேச பட்டம் விடும் திருவிழா இந்தாண்டு வரும் ஆகஸ்ட் 12ம்தேதி முதல் 15ம்தேதி வரை நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் பங்கேற்க இந்தியா மட்டுமின்றி தாய்லாந்து, அமெரிக்கா, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கலைஞர்கள் வருகை தரவுள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
மேலும், இந்த திருவிழாவில் 3 அடி முதல் 20 அடி வரையிலான பட்டங்கள் பறக்க விடப்படும் என்று தமிழக சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
சர்வதேச பட்டம் விடும் திருவிழா
#JustIn | மாமல்லபுரத்தில் 2வது ஆண்டாக சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெறவுள்ளது!#SunNews | #KiteFestival | #Mahabalipuram pic.twitter.com/h7mfUb4fQF
— Sun News (@sunnewstamil) July 6, 2023