Page Loader
சேலம் ஆவின் பால் பண்ணை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் அமைச்சர் மனோஜ் தங்கராஜ் 
சேலம் ஆவின் பால் பண்ணை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் அமைச்சர் மனோஜ் தங்கராஜ்

சேலம் ஆவின் பால் பண்ணை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் அமைச்சர் மனோஜ் தங்கராஜ் 

எழுதியவர் Nivetha P
May 17, 2023
07:32 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலத்தின் பால்வளத்துறை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றவர் அமைச்சர் மனோஜ் தங்கராஜ். இவர் சேலம் ஆவின் பால் பண்ணையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு, பால் உற்பத்தியாளர்களுக்கு முதற்கட்டமாக ரூ.5.83கோடி மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கினார். தொடர்ந்து பல நலத்திட்டங்களை வழங்கிய அவர் பின்னர் பேசுகையில், பால் உற்பத்தி இலக்கினைப்பெருக்க உள்ளூர் வங்கிகள் மற்றும் கூட்டுறவுச்சங்கங்கள் மூலம் கறவைமாடுகள் வழங்க அரசின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சம் கறவைமாடுகளை உடனே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்படும் கறவைமாடுகளுக்கு காப்பீடு வழங்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். தொடர்ந்து அனுமதிப்பெறாத பால் குளிரூட்டு நிலையங்கள் மற்றும் பால் விற்பனை நிலையங்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post