மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்கரும், தொழிலதிபருமான கருமுத்து கண்ணன் காலமானார்
மதுரை நகரின் பிரபல தொழிலதிபரும், தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தியாகராஜர் கலை கல்லூரி மற்றும் இதர கல்வி நிறுவனங்களின் தாளாளரும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தக்கருமான கருமுத்து கண்ணன் இன்று காலமானார். அவருக்கு வயது 70 கருமுத்து தியாகராஜர் செட்டியார், ராதா தம்பதியின் ஒரே மகன் கருமுத்து கண்ணன் ஆவார். இவர் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் தக்காராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துள்ளார். கோயில் கும்பாபிஷேகம், பல்வேறு சங்கங்களில் முக்கிய பொறுப்பு, கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு போன்ற பல்வேறு அறப்பணிகளையும் செய்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை கண்ணன் காலமானார். கோச்சடையில், அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.