Page Loader
இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை 

இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை 

எழுதியவர் Sindhuja SM
Jan 07, 2024
10:25 am

செய்தி முன்னோட்டம்

ஜார்கண்ட்டைச் சேர்ந்த ஒரு இந்திய மாணவரின் உடல் இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்டது. ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த ராம் ராவத் ஜனவரி 2ஆம் தேதி இத்தாலியில் உயிரிழந்தார். எம்பிஏ படிக்க இத்தாலிக்கு சென்ற ராவத், வாடகை வீட்டில் வசித்து வந்தார். புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கராவத்தின் பெற்றோர் அவரை அழைத்தபோது, அவர் அவர்களின் அழைப்பை எடுக்கவில்லை. உடனே அவரது பெற்றோர் ரவுத் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரை தொடர்பு கொண்டனர். அப்போது, மற்றொரு வீட்டின் கழிவறையில் அவர்களது மகன் இறந்து கிடந்த செய்தியை அந்த வீட்டின் உரிமையாளர் ராவத்தின் பெற்றோரிடம் கூறினார். அதனையடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

டவ்க்ம்

மாநில அரசை அணுகிய பெற்றோர் 

அவரது மரணத்தை அறிந்ததும், ராம் ராவத்தின் குடும்பத்தினர் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு ஜார்கண்ட் மாநிலத்தின் மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் பொது பிரதிநிதிகளை அணுகினர். இந்த சம்பவம் குறித்து பேசிய மேற்கு சிங்பூமின் துணை கமிஷனர் அனன்யா மிட்டல், ராம் ராவத் மரணம் குறித்து தனக்கு தகவல் கிடைத்ததாகவும், தேவையான நடவடிக்கைக்காக ஜார்கண்ட் உள்துறை மற்றும் குடியேற்ற பிரிவுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். வழக்கின் அனைத்து முன்னேற்றங்களையும் கண்காணித்து வருவதாகவும், குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் மிட்டல் மேலும் தெரிவித்துள்ளார்.