LOADING...
INS திரிகண்ட் கப்பலின் மின்னல் வேக ஆபரேஷன்! 21 மாலுமிகளை கடற்கொள்ளையர்களிடம் இருந்து பத்திரமாக மீட்டது இந்திய கடற்படை
கடற்கொள்ளையர்களை விரட்டியடித்து மாலுமிகளை மீட்டது இந்திய கடற்படை

INS திரிகண்ட் கப்பலின் மின்னல் வேக ஆபரேஷன்! 21 மாலுமிகளை கடற்கொள்ளையர்களிடம் இருந்து பத்திரமாக மீட்டது இந்திய கடற்படை

எழுதியவர் Sekar Chinnappan
Jul 02, 2026
08:13 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச கடல் பகுதியில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய கடற்படை மீண்டும் ஒருமுறை தனது உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளது. ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு ஆபத்தான சூழலில் சிக்கிய எம்வி கோல்டன் ஆர்சனல் என்ற சர்வதேச வணிகக் கப்பலை, இந்திய கடற்படையின் அதிநவீன போர்க்கப்பலான ஐஎன்எஸ் திரிகண்ட் (INS Trikand) மிக சாதுரியமாக செயல்பட்டு அதிரடியாக மீட்டுள்ளது.

ஆபத்து சிக்னல்

நள்ளிரவில் வந்த அவசர ஆபத்து சிக்னல்

செயின்ட் வின்சென்ட் நாட்டின் கொடியுடன் ஏமன் நாட்டின் ஏடன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இந்த வணிகக் கப்பல், ஜிபூட்டிக்கு கிழக்கே 300 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த ஆபத்து குறித்த அவசரத் தகவல் இந்தியப் பெருங்கடல் தகவல் மையத்திற்கு (IFC-IOR) வந்த உடனே, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் திரிகண்ட் போர்க்கப்பல் சம்பவ இடத்திற்கு மின்னல் வேகத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்திய மாலுமி

இரும்பு அறைக்குள் தப்பிப் பிழைத்த இந்திய மாலுமி

இந்த பிரம்மாண்ட சரக்குக் கப்பலில் ஒரு இந்தியர் உட்பட மொத்தம் 21 மாலுமிகள் பணியாற்றி வந்தனர். கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கப்பலின் மேல் தளங்கள் கடுமையாக சேதமடைந்தன. இருப்பினும், மாலுமிகள் அனைவரும் தங்களது சாதுரியத்தால் கப்பலுக்குள் இருக்கும் சிட்டடெல் (Citadel) எனப்படும் ரகசிய இரும்புப் பாதுகாப்பு அறைக்குள் புகுந்து பாதுகாத்துக் கொண்டனர். இதனால் கடற்படை வீரர்கள் வரும் வரை கொள்ளையர்களிடம் சிக்காமல் அவர்கள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

Advertisement

கப்பல் மீட்பு

கப்பலை மீட்டெடுத்த கடற்படை

மறுநாள் அதிகாலையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஐஎன்எஸ் திரிகண்ட் கப்பலின் சிறப்பு கமாண்டோ படை வீரர்கள், ஆபத்தில் இருந்த வணிகக் கப்பலுக்குள் அதிரடியாகப் புகுந்து முழுமையான தேடுதல் வேட்டையை நடத்தினர். கப்பலுக்குள் வேறு எந்த ஒரு சந்தேகத்திற்குரிய நபரோ அல்லது ஆயுதங்களோ இல்லை என்பதை உறுதி செய்த பின், ரகசிய அறையில் இருந்த 21 மாலுமிகளையும் பத்திரமாக மீட்டனர். இந்த ஆபரேஷனுக்கு வலு சேர்க்கும் வகையில் 'P-8I' ரக கடற்படை கண்காணிப்பு விமானமும் வான்வழியாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

Advertisement