Page Loader
சந்திரயான்-3: ட்விட்டரில் வாழ்த்துக்களைத் தெரிவித்த அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள்
ட்விட்டரில் வாழ்த்துக்களைத் தெரிவித்த அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள்

சந்திரயான்-3: ட்விட்டரில் வாழ்த்துக்களைத் தெரிவித்த அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள்

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 14, 2023
05:49 pm

செய்தி முன்னோட்டம்

இன்று நண்பகல் 2.35 மணிக்கு திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் பாயந்தது சந்திரயான்-3. இந்த வெற்றிகரமான தருணத்தை கொண்டாடும் வகையில் அரசியல் தலைவர்கள் முதல், விளையாட்டு வீரர்கள் வரை பலரும் தங்களுடைய கருத்துக்களை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்கள். பிரதமர் மோடி, தன்னுடைய ட்விட்டர் பதிவில், "வெற்றி, நம்முடைய கனவுகளைச் சுமந்து கொண்டு விண்ணில் உயரச் சென்று கொண்டிருக்கிறது சந்திரயான்-3. இந்த சாதனைக்கு இஸ்ரோவுக்கு அதன் குழுவுக்கும் வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்திருக்கிறார். இந்த சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே. "1.4 பில்லியன் இந்தியர்களின் கனவுகளையும், நம்பிக்கையும் சுமந்து செல்கிறது சந்திரயான்-3. நமது விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என தன்னுடைய கருத்தைப் பகிர்ந்திருக்கிறார் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

ட்விட்டர் அஞ்சல்

பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பதிவு:

ட்விட்டர் அஞ்சல்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கேவின் ட்விட்டர் பதிவு:

ட்விட்டர் அஞ்சல்

சச்சின் டெண்டுல்கரின் ட்விட்டர் பதிவு: