அஜித்தின் தக்ஷா குழுவுக்கு கிடைத்த பெருமிதம்; இந்திய ராணுவத்திற்கு ட்ரோன் தயாரிக்க வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
நடிகர் அஜித், சினிமா மட்டுமின்றி, தன்னுடைய தனிப்பட்ட லட்சியங்களை நோக்கியும் பயணப்பட்டு கொண்டே இருக்கிறார்.
பைக் ரேசிங்கில் தொடங்கி, துப்பாக்கி சுடுதல் போட்டி வரை பலவற்றிலும் கலந்து கொள்வதோடு, அதில் வெற்றிகளும் குவித்துள்ளார்.
அதேபோல, ட்ரோன்கள் இயக்குவதில் அவருக்கு பிரியம் உண்டு.
அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தக்ஷா குழுவுக்கு, நடிகர் அஜித் ஆலோசகராக இருந்து வந்தார்.
அந்த குழுவினருக்கு ட்ரோன்கள் தயாரிப்பது சம்பந்தமான ஆலோசனைகளை வழங்குவதற்காக அஜித் நியமிக்கப்பட்டு இருந்தார்.
இவர் ஆலோசனையின் பேரில், அக்குழு பல வெளிநாட்டு போட்டிகளில், இந்தியா சார்பில் கலந்துகொண்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
இந்நிலையில், மேலும் ஒரு தனிச்சிறப்பாக, இந்திய ராணுவத்திற்காக ட்ரோன்கள் தயாரிப்பதற்காக இந்த குழு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
இந்திய ராணுவத்திற்கு ட்ரோன் தயாரிக்க வாய்ப்பு
#Ajithkumar's #VidaaMuyarchi
— Carthick (@Karthik_Balasub) August 8, 2023
Viswarooba Vetri 🔥🔥#Dhaksha proud to #Ajith Fan ❤️ pic.twitter.com/7PnzrMu5x9