பாலஸ்தீனத்திற்கு இரண்டாவது முறையாக நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியா இரண்டாவது முறையாக நிவாரண மற்றும் மருத்துவ பொருட்களை பாலஸ்தீனத்திற்கு அனுப்பியுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், "பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம். எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு 32 டன் எடை கொண்ட இரண்டாவது IAF MCC சி17 விமானம் புறப்பட்டது." என்று தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி இந்தியா முதல் முறையாக பாலஸ்தீனத்திற்கு நிவாரண பொருட்களை அனுப்பியது. தற்போது அனுப்பப்பட்டுள்ள பொருட்கள் எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு செல்கிறது. எல்-அரிஷ் விமான நிலையம் காசா-எகிப்து எல்லையான ரஃபா கிராசிங்கில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ரஃபா கிராசிங்கும் முழுமையாக செயல்படுவதில்லை
ரஃபா கிராசிங் வழியாக தற்போதைக்கு காசாவில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்ப முடியும். மற்ற எல்லைகள் எல்லாம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தொடங்கியதில் இருந்து ரஃபா கிராசிங்கும் முழுமையாக செயல்படுவதில்லை. இந்நிலையில், இது குறித்து பேசியிருக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, அப்படி எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்று தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஒரு மாதமாக ஹமாஸ் குழுவை அழிப்பதற்காக காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 10,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.