Page Loader
இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார் 
இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார்

இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார் 

எழுதியவர் Nivetha P
Oct 16, 2023
11:54 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான எம்.எஸ்.கில் என்று அழைக்கப்படும் மனோகர் சிங் கில்(86) உடல்நல குறைவு காரணமாக டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(அக்.,15) காலமானார். இவர் கடந்த 1996ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2001ம் ஆண்டு ஜூன் மாதம் வரை தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றியுள்ளார். 2001ம் ஆண்டு தனது பணிக்காலம் முடிந்த பின்னர், காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர் மாநிலங்களவை எம்.பி.பதவியினை வகித்தார். அதனை தொடர்ந்து அவர், கடந்த 2008ம் ஆண்டில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

அதிகாரி 

தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து அரசியலில் இணைந்த முதல் அதிகாரி எம்.எஸ்.கில் 

அரசு சார்ந்த பணிகளில் தனது சிறந்த பங்களிப்பை அளித்த காரணத்தினால் மத்திய அரசு இவருக்கு 2000ல் 'பத்ம விபூஷண்' வழங்கி சிறப்பித்தது. தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து அரசியலில் இணைந்த முதல் அதிகாரி என்னும் பெருமையினையும் இவர் பெற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பல துறைகளில் பதவி வகித்துள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் பதவி வகித்த பொழுது தேர்தல் ஆணையர்களாக எம்.எஸ்.கில் மற்றும் ஜி.வி.ஜி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டதன் மூலம், தேர்தல் ஆணையமானது பல்வேறு உறுப்பினர்களை கொண்ட அமைப்பாக மாறியது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. எம்.எஸ்.கில்லுக்கு 3 மகள்கள் மற்றும் மனைவி இருக்கும் நிலையில், இன்று(அக்.,16)உடல் டெல்லியில் தகனம் செய்யப்படவுள்ளது.