Page Loader
இந்தியாவில் ஒரே நாளில் 9,111 கொரோனா பாதிப்பு: 27 பேர் உயிரிழப்பு
இதுவரை, இந்தியாவில் 4.48 கோடி(4,48,27,226) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 9,111 கொரோனா பாதிப்பு: 27 பேர் உயிரிழப்பு

எழுதியவர் Sindhuja SM
Apr 17, 2023
12:26 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று(ஏப்-16) 10,093ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 9,111ஆக குறைந்துள்ளது. நாட்டின் செயலில் உள்ள கொரோனா 60,313ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.13 சதவீதமாகும். இதுவரை, இந்தியாவில் 4.48 கோடி(4,48,27,226) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,141 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 27 இறப்புகள் பதிவாகியுள்ளன. குஜராத்தில் ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளது. மேலும், உத்தரபிரதேசம் மற்றும் கேரளாவில் தலா நான்கு, டெல்லி மற்றும் ராஜஸ்தானில் தலா மூன்று, மகாராஷ்டிராவில் இரண்டு, பீகார், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றில் தலா ஒரு உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது.

details

கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,42,35,772 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 6,313 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி கொரோனா நேர்மறை விகிதம் 8.40 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 4.94 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.68 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,08,436 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 220,66,26,522 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 198 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.