இந்தியாவில் ஒரே நாளில் 535 கொரோனா பாதிப்பு: 5 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-24) 552ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 535 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 6,168ஆக சரிவடைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.01 சதவீதமாகும். இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி (4,49,88,426) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,854 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 5 இறப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக சுகாதாரத்துறை நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், கொரோனா கண்காணிப்பை கடுமையாக்க வேண்டும் என்று மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு மாநில பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்
இந்தியாவில் மே-23ஆம் தேதி 405 பாதிப்புகளும் மே-22ஆம் தேதி 473 பாதிப்புகளும், மே 21ஆம் தேதி 756 பாதிப்புகளும் மே 20ஆம் தேதி 782 பாதிப்புகளும், மே 19ஆம் தேதி 865 பாதிப்புகளும், மே-18ஆம் தேதி 906 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன. கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,50,404ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 953 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா மீட்பு விகிதம் 98.80 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,23,395 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 220,66,02,872 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,596 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.