
இந்திய பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
ரயில்வே திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் சாலை திட்டங்களை துவக்கி வைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் மார்ச் மாதம் 23ம் தேதி தமிழகம் வருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பாஜக'விற்கும், அதிமுக'விற்கும் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், மோடியின் வருகை அரசியல் வட்டாரங்களில் மிக முக்கியமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இன்று கிருஷ்ணகிரிக்கு வருகை தந்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா அவர்கள் 10 மாவட்ட பாஜக அலுவலகங்களை திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குத்தாரப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜெ.பி,நட்டா அம்மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.
திரிபுரா வெற்றி
கூடிய விரைவில் தமிழ்நாட்டில் தாமரை மலரும் - ஜெ.பி.நட்டா
அதனை தொடர்ந்து அவர் புதுக்கோட்டை, திருச்சி, தேனி, தருமபுரி, உள்ளிட்ட 9 மாவட்ட பாஜக அலுவலகங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் மோடி அறிவித்த சிறப்பான திட்டங்களின் எதிரொலியாகத்தான் திரிபுராவில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என்று கூறினார்.
மேலும், தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் அனைவரும் திறமையாக செயல்பட்டு வருகிறார்கள்.
கூடிய விரைவில் தமிழ்நாட்டில் தாமரை மலரும் என ஜெ.பி.நட்டா அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மற்ற கட்சிகளை போல வாரிசு கட்சியாக பாஜக இல்லை.
மக்களுக்கான நேரடி ஆட்சி செய்யும் கட்சியாகவே பாஜக'வை மோடி வளர்த்து வருகிறார் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.