Loading...
1,000 கிமீ தூரம் பாய்ந்து தாக்கும் இந்திய ட்ரோன்! பொக்ரானில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட KAL ட்ரோன்
1,000 கிமீ பாயும் இந்தியத் தயாரிப்பு கல் ட்ரோன் சோதனை வெற்றி

1,000 கிமீ தூரம் பாய்ந்து தாக்கும் இந்திய ட்ரோன்! பொக்ரானில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட KAL ட்ரோன்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 21, 2026
05:10 pm

செய்தி முன்னோட்டம்

நொய்டாவை சேர்ந்த ஐஜி டிஃபென்ஸ் பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனம் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கிய கல் (KAL) என்ற நீண்டதூர ஒருவழித் தாக்குதல் ட்ரோன், ராஜஸ்தானின் பொக்ரான் துப்பாக்கி சூட்டுப் பயிற்சித் தளத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. நவீன போர்க்களத்தில் நீண்டதூர டிரோன்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்திய ராணுவத்தின் தன்னாட்சி தாக்குதல் திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த உள்நாட்டு ட்ரோன் உருவாக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

தொழில்நுட்ப அம்சங்கள்

1,000 கிமீ பாயும் ஆற்றல் மற்றும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள்

இந்த கல் டிரோன் அதிகபட்சமாக 1,000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று எதிரிகளின் இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது.

தொடர்ந்து 7 முதல் 8 மணி நேரம் பறக்கும் ஆற்றல் கொண்ட இந்த டிரோன், 50 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை சுமந்து கொண்டு கடல் மட்டத்திலிருந்து 5,000 மீட்டர் உயரத்தில் பறக்கக்கூடியது.

சாட்டிலைட் வழிகாட்டுதல் (GNSS) மற்றும் நவீன INS வழிசெலுத்தல் அமைப்புகள் மூலம் இது தானியங்கி முறையில் துல்லியமாக செயல்படுகிறது.

பாதுகாப்பு உத்தி

உக்ரைன்-ரஷ்யா போரும் இந்தியாவின் புதிய பாதுகாப்பு உத்தியும்

ரஷ்யா-உக்ரைன் போரில் ஈரான் தயாரிப்பான ஷாஹெத்-136 மற்றும் ரஷ்யாவின் ஜெரான்-2 ட்ரோன்கள் ஏற்படுத்திய மாற்றங்களைத் தொடர்ந்து, குறைந்த செலவில் நீண்டதூர தாக்குதல் நடத்தும் ட்ரோன்களின் தேவை அதிகரித்துள்ளது.

எதிரிகளின் ரேடார்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகளைத் தகர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கல் ட்ரோன், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த கிரிட் போர்க்கள மேலாண்மை அமைப்புடன் இணைத்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

டி-சூல் பீம்

5 டிரோன்களை ஒரே நேரத்தில் அழித்த டி-சூல் பீம் சிஸ்டம்

இந்த சோதனையின் போது, ஐஜி டிஃபென்ஸ் நிறுவனத்தின் டி-சூல் பீம் (T-Shul BEAM) என்ற கையடக்க ஆண்டி-ட்ரோன் அமைப்பும் சோதிக்கப்பட்டது.

இந்த சாஃப்ட்-கில் தொழில்நுட்பம் கொண்ட கருவி, ஒரே நேரத்தில் ஊடுருவிய 5 வெளிநாட்டு ட்ரோன்களின் மின்னணுத் தொடர்பு மற்றும் வழிகாட்டுதல் அமைப்புகளைத் துண்டித்து வெற்றிகரமாக செயலிழக்க செய்தது.

கல் ட்ரோன் மற்றும் டி-சூல் பீம் அமைப்புகளின் இந்த வெற்றி இந்திய பாதுகாப்புத் துறையின் தற்சார்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT