இந்தியாவில் ஒரே நாளில் 288 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி
நேற்று(மே-31) 310ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 288ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 3,925ஆக சரிவடைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.01 சதவீதமாகும். இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி (4,49,90,876) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,872 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 2 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்
இந்தியாவில் மே 25ஆம் தேதி 224 பாதிப்புகளும், மே 29ஆம் தேதி 310 பாதிப்புகளும் மே 28ஆம் தேதி 403 பாதிப்புகளும், மே 27ஆம் தேதி 425 பாதிப்புகளும், மே 26ஆம் தேதி 490 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன. கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,55,079ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 583 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,736 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 220,67,11,869 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,317 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்த காலவரிசையைப் பகிரவும்