Loading...
பிளாட்பார டிக்கெட்டை விடக் குறைவான விலை! நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலைத் தொடங்கி வைத்தார் மோடி
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலைத் தொடங்கி வைத்தார் மோடி

பிளாட்பார டிக்கெட்டை விடக் குறைவான விலை! நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலைத் தொடங்கி வைத்தார் மோடி

எழுதியவர் Venkatalakshmi V
Jul 17, 2026
06:20 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய இரயில்வேயின் பசுமை போக்குவரத்து வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ஆற்றல் மூலம் இயங்கும் பயணியர் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவிலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத அதிநவீன தொழில்நுட்பத்துடன், நாட்டின் மிகக் குறைந்த கட்டண இரயில் சேவையாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலின் தொடக்கத்திற்குப் பிறகு, ஒட்டுமொத்த பொதுமக்களாலும் அதிகம் பேசப்படும் விஷயமாக இதன் பயணக் கட்டணம் அமைந்துள்ளது. நாட்டின் பல இரயில் நிலையங்களில் வசூலிக்கப்படும் பிளாட்பார டிக்கெட் விலையை விடக் குறைவான கட்டணத்தில் இந்த சேவை வழங்கப்படுகிறது. இந்த ரயிலின் குறைந்தபட்ச கட்டணம்: ₹5, அதிகபட்சக் கட்டணம்: ₹25 (பயண தூரத்தின் அடிப்படையில்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வழித்தடம்

வழித்தடம் மற்றும் பயண நேரம்

வடக்கு இரயில்வேயின் கீழ் இயங்கும் இந்த ஹைட்ரஜன் ரயில், ஜிந்த் சந்திப்பு மற்றும் சோனிபட் ஆகிய நகரங்களுக்கு இடையே சுமார் 90 கிலோமீட்டர் தூரத்தை இரண்டு மணி நேரத்தில் கடக்கும்.

இந்த வழித்தடத்தில் ஜிந்த் சிட்டி, பாண்டு பிந்தாரா, லலித் கேரா, பாம்ப்வா, ஈசாபூர் கேரி, புடானா, காந்த்ராய், ரப்ரா, லாத், மோஹனா மற்றும் பர்வாஸ்னி ஆகிய நிறுத்தங்கள் அமைந்துள்ளன.

மணிக்கு 110 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயில், தற்போது 75 கிமீ வேகத்தில் இயக்கப்பட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

10 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் ஒரே நேரத்தில் 2,600 பயணிகள் வரை பயணிக்க முடியும்.

சிறப்பம்சங்கள்

தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு

வழக்கமான ரயில்களைப் போல டீசல் அல்லது ஓவர்ஹெட் மின்சாரக் கம்பிகள் இன்றி, ரயிலிலேயே இருக்கும் 1,200 kW ஹைட்ரஜன் பியூவல் செல் மூலம் இந்த ரயில் மின்சாரத்தைத் தயாரித்துக் கொள்கிறது.

ஹைட்ரஜன் வாயு ஆக்சிஜனுடன் வினையாற்றும்போது வெறும் தண்ணீரும், வெப்பமும் மட்டுமே கழிவாக வெளியேறுவதால் இது பூஜ்ஜிய-உமிழ்வு (Zero-emission) கொண்டதாகும்.

மேலும், இந்த ரயிலில் ஹைட்ரஜன் கசிவு, புகை, தீ மற்றும் அதிக வெப்பத்தை கண்டறியும் அதிநவீன பாதுகாப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

இதற்காக இந்தியாவின் மிகப்பெரிய ஹைட்ரஜன் சேமிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஜிந்த் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT