உத்திரபிரதேசத்தில் மாலில் பெண் ஊழியரை பாலியல் வன்புணர்வு செய்த செக்யூரிட்டி
உலகமெங்கிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும் இந்த கொடுமையானது முடிந்தப்பாடில்லை. அவ்வாறான ஓர் சம்பவமே மீண்டும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் மிக பிரபலமான ஷாப்பிங் மால் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மாலில் ஹவுஸ் கீப்பிங் பணியில் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் கடந்த பிப்ரவரி 27ம் தேதி எப்பொழுதும் போல பணிக்கு வந்துள்ளார். பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் முன்னர் தனது சீருடையினை மாற்றி கொள்ள உடை மாற்றும் அறையின் உள்ளே சென்றதாக கூறப்படுகிறது.
கணவரின் உறுதுணையோடு போலீசில் புகார் அளித்த பெண்
அப்போது அதே மாலில் வேலை பார்க்கும் பாதுகாப்பு காவலர் ஒருவர் திடீரென அந்த பெண் இருந்த அறைக்குள் சென்றுள்ளார். அவரை கண்ட அப்பெண் அதிர்ச்சியடைந்து கூச்சலிட முயன்றுள்ளார். ஆனால் அந்த பாதுகாப்பு காவலர் துப்பாக்கியை காட்டி மிரட்டி அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதற்கு உடந்தையாக அந்த பெண்ணுடன் வேலை பார்க்கும் இரண்டு ஆண் ஊழியர்களே இருந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கடுமையான மனவுளைச்சலுக்கு ஆளாகி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். அச்சத்தில் தனக்கு நேர்ந்தது குறித்து யாரிடமும் முதலில் இதனை தெரிவிக்காமல் இருந்தநிலையில், தைரியத்தை வரவழைத்து கொண்டு தனது கணவரிடம் கூறியுள்ளார். பின்னர் அவரின் உறுதுணையோடு காவல்துறைக்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.