ஹோலி விடுமுறையை முன்னிட்டு அதிகரித்திருக்கும் பெண்களின் சுற்றுலா பயணம்
இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு பெண் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழகத்திற்கு சுற்றுலா வருபவர்கள், பெண்கள் மட்டும் பயணம் செய்யும் சுற்றுலா திட்டத்தை அதிகம் தேர்வு செய்வதால், இது போன்ற பயண திட்டங்களின் தேவை தற்போது அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் இருந்து சுற்றுலா செல்லும் பெண் பயணிகள் புதுச்சேரி, ஹிமாச்சல், அந்தமான், கேரளா மற்றும் வடகிழக்கு சுற்றுலா தலங்களை அதிகம் தேர்வு செய்வதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு அதிக பெண்கள் ஆன்மீக சுற்றுலாக்களை தேர்த்திடுத்திருக்கிறார்களாம். அதனால், துவாரகா, வாரணாசி போன்ற இடங்களுக்கு அதிக முன்பதிவு நடந்துள்ளது.
பெண் பயணிகளின் எண்ணிக்கை 25-30% அதிகரிப்பு
வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் தமிழக பெண்கள் இந்தியாவிற்கு மிக அருகில் உள்ள சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளையே அதிகம் தேர்ந்தெடுக்கிறார்களாம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழக பெண் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 25-30% அதிகரித்துள்ளது. தமிழக பெண்கள், சாகச பயணங்கள், சோலோ ட்ராவல் போன்ற புதுவித பயணங்களில் அதிக நாட்டம் கொண்டுள்ளனர். இளைஞர்களின் எண்ணிக்கை மட்டுமில்லாமல் 40 வயதுக்கு மேற்பட்ட பெண் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.