Page Loader
சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி - முதல்வர் நிவாரண தொகையில் இருந்து தலா 2 லட்சம்
சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி - முதல்வர் நிவாரண தொகையில் இருந்து தலா 2 லட்சம்

சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி - முதல்வர் நிவாரண தொகையில் இருந்து தலா 2 லட்சம்

எழுதியவர் Nivetha P
Apr 05, 2023
06:15 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் குளத்திற்கு தீர்த்தவாரி பூஜை செய்ய 25 பேர் பல்லக்கை தூக்கிக்கொண்டு சென்றுள்ளனர். பல்லக்கில் இருந்த சாமியை நீராட வைத்துவிட்டு, பின்னர் பல்லக்கினை இறக்கி வைத்துவிட்டு அவர்கள் அனைவரும் குளிக்க சென்றதாக தெரிகிறது. அப்போது அதில் 5 பேர் மட்டும் மாயமாகியுள்ளனர். இது குறித்து வேளச்சேரி தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் அங்கு விரைந்துவந்து 5 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். நீரில் மூழ்கி இறந்த 5 பேரும் அர்ச்சகர்கள் என்பது தெரியவந்துள்ள நிலையில், அவரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முதல்வரின் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் உடல்களை பார்வையிட்டார்.

ஆழ்ந்த இரங்கல்

நிவாரண நிதி அறிவித்து அறிக்கை வெளியீடு

அப்போது அவர், ஒருவரை மீட்க முயன்று அடுத்தடுத்து 5 பேர் ஆழமான இடத்தில் சிக்கி மூழ்கியுள்ளார்கள். இதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே காரணம். பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு முதல்வர் நிச்சயம் உதவி செய்வார் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர், இன்று நடந்த கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கியப்பொழுது எதிர்பாராவிதமாக சூர்யா(22), பானேஷ்(22), ராகவன்(22), யோகேஸ்வரன்(21), ராகவன்(18) ஆகிய 5 பேரும் ஆழமான இடத்தில் சிக்கி உயிரிழந்தது குறித்த செய்தியினைக்கேட்டு வேதனையடைந்தேன். உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். இவர்கள் குடும்பத்தாருக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.