நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று(பிப் 9) தெரிவித்தது. லித்தியம், EV பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் முக்கிய கூறுகளில் ஒன்றாகும். "ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் சலால்-ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டன்கள் லித்தியம் வளங்களை(G3) முதன்முறையாக இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் நிறுவி உள்ளது." என்று சுரங்கத்துறை அமைச்சகம் நேற்று(பிப் 9) தெரிவித்தது. மேலும் லித்தியம் மற்றும் தங்கம் உள்ளிட்ட 51 கனிம தொகுதிகள் அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும் அது தெரிவித்திருக்கிறது. இந்த 51 கனிமத் தொகுதிகளில், 5 தொகுதிகள் மட்டுமே தங்கம். பிற தொகுதிகளில் பொட்டாஷ், மாலிப்டினம், அடிப்படை உலோகங்கள் போன்றவைகள் அடங்கும்.
2023-24ஆம் ஆண்டில் 966 திட்டங்களை செயல்படுத்த இருக்கும் GSI
இவை ஜம்மு காஷ்மீர்(UT), ஆந்திரா, சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 11 மாநிலங்களில் பரவியுள்ளன. 2018-19 கள செஷன்களில் இருந்து இன்றுவரை GSIஆல் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் அடிப்படையில் இந்த தொகுதிகள் தயாரிக்கப்பட்டன. இவை தவிர, 7897 மில்லியன் டன் அளவுகள் கொண்ட நிலக்கரி மற்றும் லிக்னைட் பற்றிய 17 அறிக்கைகளும் நிலக்கரி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. GSI செயல்படும் வெவ்வேறு தீம்கள் மற்றும் தலையீடு பகுதிகள் பற்றிய ஏழு வெளியீடுகளும் சந்திப்பின் போது வெளியிடப்பட்டன. "2023-24ஆம் ஆண்டில், 12 கடல் கனிம ஆய்வுத் திட்டங்கள் உட்பட 318 கனிம ஆய்வுத் திட்டங்களை உள்ளடக்கிய 966 திட்டங்களை GSI எடுத்துள்ளது" என்று அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.