புதுக்கோட்டையில் 1 அடி நீளமுள்ள வாழை குருத்தில் பூத்துள்ள வாழைப்பூ
தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர் என்னும் கிராமத்தில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக விளை நிலங்கள் உள்ள நிலையில், அவர் தனது தோட்டத்தில் வாழைமரங்களை நடவு செய்துள்ளார் என்று தெரிகிறது. அதன்படி இவரது தோட்டத்தில் வைக்கப்பட்ட வாழைக்கன்றுகளுள், 1 அடி நீளம் கொண்ட வாழை குருத்தில் வாழைப்பூ ஒன்று பூத்துள்ளது. இது ஒரு ஆச்சர்யமான விஷயம் என்பதால் சுற்றுவட்டார மக்கள் பலர் இதனை நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர் என்றும் செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் இது குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.