தமிழ்நாடு வானிலை நிலவரம்: 6 மாவட்டங்களில் சதமடித்த வெயில்; இன்று மழைக்கு வாய்ப்பா?
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த வெப்பத்தின் தாக்கம் நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. மதுரை, சென்னை, திருவள்ளூர், நாகை, திருச்சி மற்றும் நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிச் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 106.7°F வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், இன்றைய (ஜூலை 23) வானிலை மாற்றம் மற்றும் மழை வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:
முன்னறிவிப்பு
மழைக்கான முன்னறிவிப்பு
தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்றும் நாளையும் (ஜூலை 23, 24), தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூலை 25 & 26, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், உள் தமிழக மாவட்டங்களில் இயல்பை விட 2 -3°C வெப்பநிலை உயரும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும், அதிகபட்ச வெப்பநிலை 36-37°C வரை இருக்கும் எனவும் IMD தெரிவித்துள்ளது.