Loading...
தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை உயர்வு; நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்
தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை உயர்வு

தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை உயர்வு; நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 23, 2026
10:48 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தொடர்ந்து நான்காவது நாளாக மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை (ஜூலை 23), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹70 அதிகரித்து ₹13,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹560 அதிகரித்து ₹1,08,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹77 அதிகரித்து ₹14,728 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹616 அதிகரித்து ₹1,17,824 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.

அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹70 அதிகரித்து ₹11,315 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹560 அதிகரித்து ₹90,520 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே வியாழக்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹245 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,45,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT