LOADING...
திருவள்ளூர் உட்பட 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: IMD
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

திருவள்ளூர் உட்பட 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: IMD

எழுதியவர் Venkatalakshmi V
Sep 19, 2025
04:15 pm

செய்தி முன்னோட்டம்

திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 19) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று முதல் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post