LOADING...
'Ditwah' வலுவிழப்பு: தமிழகம் முழுவதும் இன்று பரவலாக மழை பெய்யும்!
சென்னையின் மீதான மழைப்பொழிவு தாக்கம் சற்று குறைந்துள்ளது

'Ditwah' வலுவிழப்பு: தமிழகம் முழுவதும் இன்று பரவலாக மழை பெய்யும்!

எழுதியவர் Venkatalakshmi V
Dec 03, 2025
08:39 am

செய்தி முன்னோட்டம்

வட தமிழகக் கடலோரப் பகுதியில் மையம் கொண்டிருந்த 'Ditwah' புயலின் எச்சமானது, தொடர்ந்து நகர்ந்து தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த நிலையில், தற்போது மழைக்கான அச்சுறுத்தல் மேற்கு மாவட்டங்களை நோக்கி நகர்ந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னையின் மீதான மழைப்பொழிவு தாக்கம் சற்று குறைந்துள்ளது. எனினும் காலை 10 மணி வரை KTCC பகுதிகளில் பரவலான மழை இருக்கும் என ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். அதே நேரத்தில் தமிழகம் முழுவதுமே இன்று பரவலான மழை இருக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் 'Tamilnadu Weatherman' பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

மழை

சென்னையில் மழை படிப்படியாக குறையும் 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்நோக்கி நகர்ந்து வலுவிழப்பதால், கனமழைக்கான எச்சரிக்கை தற்போது தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை நோக்கித் திரும்பியுள்ளது. காற்றழுத்த தாழ்வு கரையை கடக்க துவங்கியதால் சென்னையில் இன்று மழை படிப்படியாக குறையும். எனினும், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Advertisement

கனமழை

கனமழை எச்சரிக்கை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து தமிழக உள்மாவட்டங்கள் நோக்கி திரும்பியுள்ளதால் நீலகிரி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால், இம்மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தவிர, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement