
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிக்காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4மாவட்டங்களை கனமழை புரட்டிப்போட்டது.
ரெட்அலெர்ட் கொடுக்கப்பட்ட நிலையிலும், இன்று(டிச.,19)ஓரளவு மழை குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
இதனால் அங்கு தற்போது மீட்பு பணிகள் நடைப்பெறுகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் 8மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தென்தமிழகத்தின் அநேக இடங்கள், வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழைப்பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
மழை குறித்த எச்சரிக்கை
இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!#SunNews | #WeatherUpdate | #TNRains pic.twitter.com/NZnbhSdtNf
— Sun News (@sunnewstamil) December 19, 2023