ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை - நிலச்சரிவுகளில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் பலி
ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்ததோடு, சாலைகளும் சேதமடைந்துள்ளன. பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிம்லா, மண்டி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் சிக்கி இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடங்களில் தேசியப்பேரிடர் மீட்புப்படையினரும், ராணுவவீரர்களும் காணாமல் போனோரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஹிமாச்சலப்பிரதேசத்தில் அடுத்த 2 நாட்களுக்கும், உத்தரகாண்ட்டில் அடுத்த 4நாட்களுக்கும் கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, சிம்லா, மண்டி மாவட்டங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்துவிழுந்து நீரில் அடித்துச்செல்லும் வீடியோக்காட்சி இணையத்தில் பரவிக்காண்போரை பதபதைக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.