அதிக வெப்ப அலை பரவுவதை அடுத்து, கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திற்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக "ஆரஞ்சு அலர்ட்" விடுத்துள்ளது மேலும், மே 2 வரை வெப்ப அலைகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது. கூடுதலாக, வெப்ப அலைகளின் சாத்தியக்கூறு காரணமாக, அதே காலகட்டத்தில் கேரளாவின் ஆலப்புழா, திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. அம்மாநிலத்தின் பாஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள கலைகுண்டாவில் செவ்வாய்கிழமை 47.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது என்று IMD தெரிவித்துள்ளது.
ஊட்டியை தாக்கியது வெப்ப அலை
ஒடிசாவின், நான்கு மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயர்ந்துள்ளது. மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பரிபாடா மாநிலத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 44.8 டிகிரி செல்சியஸ் பதிவாகி, இந்த கோடையில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக மாறியுள்ளது என பிராந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் "மலைகளின் ராணி" என அழைக்கப்படும் ஊட்டியில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வெப்பமான கோடை நிலவுகிறது. ஏனெனில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்று பிடிஐ தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், சென்னையில் 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.