
தமிழகத்தில் வெப்ப நிலையினை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் - சுகாதாரத்துறை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் தற்போது கோடை காலம் துவங்கவுள்ளது. இப்போதே தமிழகம் முழுவதும் வெயில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அதிகளவில் அதிகரிக்கும் வெப்பத்தினை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பொது மக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.
உடல் சூடு, தோளில் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி உள்ளிட்டவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
குழந்தைகள், வயதானோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் முடிந்தளவில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
வெளியே வெயிலில் செல்ல அவசியம் ஏற்பட்டால் குடை, உடலினை முழுதாய் மறைக்கும் பருத்தி ஆடைகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
தமிழகத்தில் வெப்ப நிலையினை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழகத்தில் வெப்ப நிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல். தமிழகத்தில் இந்த ஆண்டு வெப்ப அலையை எதிர்கொள்ள சுகாதாரத் துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.#PTSNews | #Temperature pic.twitter.com/oAs16adk9Y
— PTS News (@ptsnewstamil) March 15, 2023