நாளை தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கும் விஜய்! சென்னை நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசியலில் நிலவி வந்த நிலையற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் நாளை (மே 9) தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி 108 இடங்களில் வென்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, அவர் ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் இல்லாமல் இருந்த நிலையில், காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன்மூலம், பெரும்பான்மையை பெற்றுள்ள நிலையில், நாளை காலை 11 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் முறைப்படி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Vijay Swearing Ceremony | நிரூபித்தாா் விஜய்
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) May 8, 2026
120 எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக ஆளுநா் அா்லேக்காிடம் பெரும்பான்மையை நிரூபித்தாா் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நாளை காலை முதலமைச்சராக பதவியேற்கிறார் #TVK #TVKVijay #ChiefMinister… pic.twitter.com/5c9jcLWJ1u