
நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்த மத்திய கல்வி அமைச்சகம் திட்டம்
செய்தி முன்னோட்டம்
இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான (NEET UG) நீட் தேர்வை கணினி வழித் தேர்வாக (CBT) நடத்துவது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. சமீபத்தில் கேள்வித்தாள் கசிவு மற்றும் தேர்வு பாதுகாப்பு தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து இந்த சீர்திருத்தம் பரிசீலனையில் உள்ளது. நாடு முழுவதும் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கும் மிகப்பெரிய நுழைவுத் தேர்வு நீட் ஆகும். இது, 1,08,000 க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் பிற மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நடத்தப்படுகிறது. பாரம்பரிய காகித அடிப்படையிலான தேர்வில் இருந்து ஆன்லைன் முறைக்கு மாறுவது சாத்தியமா என்பது குறித்து கல்வி அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
கேள்வித்தாள் கசிவு
2024 கேள்வித்தாள் கசிவைத் தொடர்ந்து சீர்திருத்தம்
2024 ஆம் ஆண்டு கேள்வித்தாள் கசிவு சர்ச்சையை தொடர்ந்து நீட் தேர்வில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது. இது தேசிய அளவிலான தேர்வுகளின் நம்பகத்தன்மை குறித்து கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. இதையடுத்து, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, நீட் தேர்வை கணினி வழித் தேர்வாக மாற்றுவது ஒரு சாத்தியமான சாத்தியக்கூறு என்று பரிந்துரைத்தது.
முடிவு
முடிவு எடுக்கும் முன் கலந்தாலோசனை
நீட் மற்றும் யுஜிசி நெட் தேர்வுகளில் முறைகேடுகள் குறித்த சிபிஐயின் விசாரணைகள் நடந்து வரும் நிலையில், தேர்வு முறையை மாற்றுவது குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மாணவர் பாதிப்பு குறித்த தகவல்களை அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்த முடிவு நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மருத்துவமருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதால், இந்த விவகாரத்தில் சுகாதார அமைச்சகத்துடன் கலந்தாலோசனை முக்கியப் பங்கு வகிக்கும்.