LOADING...
கடந்த 10 ஆண்டுகளில் உலகில் அதிக மக்கள்தொகை வளர்ச்சியில் நைஜீரியா முதலிடம்; இந்தியாவுக்கு எந்த இடம்?
கடந்த 10 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சியில் நைஜீரியா முதலிடம்

கடந்த 10 ஆண்டுகளில் உலகில் அதிக மக்கள்தொகை வளர்ச்சியில் நைஜீரியா முதலிடம்; இந்தியாவுக்கு எந்த இடம்?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 07, 2025
06:50 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச அளவில் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் (2015 முதல் 2025 வரை) அதிக மக்கள்தொகை வளர்ச்சியைச் சந்தித்த நாடுகள் குறித்த புதிய தரவுகளை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி வெளியிட்டுள்ளன. இந்த வளர்ச்சியில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியா முதலிடத்தில் உள்ளது. நைஜீரியா கடந்த 10 ஆண்டுகளில் 50 மில்லியன் (5 கோடி) மக்கள் அதிகரிப்பைச் சந்தித்து, ஆப்பிரிக்காவில் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகத் திகழ்கிறது. பாகிஸ்தான் (38 மில்லியன்) இரண்டாவது இடத்திலும், இந்தியா (35 மில்லியன்) மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தோனேசியா (30 மில்லியன்) மற்றும் எத்தியோப்பியா (25 மில்லியன்) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஆசிய நாடுகள்

ஆசிய நாடுகள் முன்னணி

மக்கள்தொகை வளர்ச்சியில் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளே முன்னிலையில் உள்ளன. இந்த அதிக வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக, இளைய வயதினரின் அதிக விகிதம், கல்வி மற்றும் சுகாதார சேவைகளின் குறைபாடு, குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வுப் பற்றாக்குறை மற்றும் சில நாடுகளில் குறைந்த குழந்தை இறப்பு விகிதம் ஆகியவை உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, 2023 இல் சீனாவை விஞ்சி உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடாக மாறியது. இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 35 மில்லியன் மக்கள் அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தாலும், நைஜீரியா மற்றும் பாகிஸ்தானை விடக் குறைந்த வேகத்திலேயே உள்ளது. இந்த மக்கள்தொகை அதிகரிப்பு நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு பக்கமாக இருந்தாலும், வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.