LOADING...
கெட்டுப்போன உணவை டெலிவரி செய்தால் இனி சும்மா விடாதீங்க! பொதுமக்கள் கையில் FSSAI-யின் புதிய ஆயுதம்
FSSAI புதிய பொது விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கியுள்ளது

கெட்டுப்போன உணவை டெலிவரி செய்தால் இனி சும்மா விடாதீங்க! பொதுமக்கள் கையில் FSSAI-யின் புதிய ஆயுதம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 13, 2026
07:30 am

செய்தி முன்னோட்டம்

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்(FSSAI) 'Be The Eyes of Food Safety' என்ற புதிய பொது விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பாதுகாப்பற்ற உணவு விநியோகம், அசுத்தமான சமையலறைகள் மற்றும் மோசமான உணவு கையாளுதல் நடைமுறைகளை நேரடியாக தட்டி கேட்கவும், புகார் அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக FSSAI-ன் அதிகாரப்பூர்வ 'Food Safety Connect App' செயலியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. "பாதுகாப்பற்ற உணவுப் பழக்கம் அனைவரையும் பாதிக்கிறது. தவறு நடப்பதைக் கண்டால், உடனே புகைப்படம் எடுத்து, இந்தச் செயலி மூலம் அறிக்கை தாக்கல் செய்து, பாதுகாப்பான உணவுச் சமுதாயத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்" என்று எக்ஸ் தளத்தில் FSSAI பதிவிட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

நோட்டீஸ்கள்

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டுக்கு 9 நோட்டீஸ்கள்

இதற்கிடையில், 'ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்' மீது கெட்டுப்போன, காலாவதியான மற்றும் அசுத்தமான உணவுப் பொருட்களை விநியோகிப்பதாக நுகர்வோரிடமிருந்து அடுக்கடுக்கான புகார்கள் வந்தன. இது தொடர்பாக சனிக்கிழமை அன்று FSSAI அமைப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006-ன் கீழ் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டுக்கு 9 நோட்டீஸ்களை அனுப்பி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக, காலாவதியான புரோட்டீன் பவுடர், கெட்டுப்போன முட்டைகள் மற்றும் அசுத்தமான குழந்தைகளுக்கான பால் பவுடர் போன்றவற்றை விநியோகித்தது மற்றும் செல்லுபடியாகாத FSSAI உரிம எண்களை பயன்படுத்தியது போன்ற கடுமையான விதிமீறல்கள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதுகுறித்து ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தரப்பில்,"FSSAI சுட்டிக்காட்டியுள்ள விபரங்களை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம், இந்தச் சிக்கலைத் தீர்க்க அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மற்ற பிராண்டுகள்

பிரபல பிராண்டுகளுக்கு இறுகும் பிடி

கடந்த 2 முதல் 3 மாதங்களில் மட்டும், தவறான விளம்பரங்கள் மற்றும் நுகர்வோரை ஏமாற்றும் விதத்திலான லேபிள்களை பயன்படுத்திய பல எனர்ஜி டிரிங்க்ஸ் நிறுவனங்கள், மதுபான நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களுக்கு FSSAI நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரெட் புல், பெப்சிகோவின் அட்ரினலின் ரஷ், ரிலையன்ஸின் காம்பா எனர்ஜி, ஸ்டிங், ஹெல் எனர்ஜி மற்றும் மான்ஸ்டர் எனர்ஜி ஆகிய 6 முன்னணி பான பிராண்டுகள் தங்களை 'எனர்ஜி டிரிங்க்ஸ்' என்று கூறிக்கொண்டு தவறான விளம்பரங்களைச் செய்ததாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதேபோல், நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், 'பிரெஷ் பன்னீர்' என்ற பெயரில் தவறான உரிமை கோரல்களை முன்வைத்ததற்காக 'ஹெரிடேஜ் ஃபுட்ஸ்' நிறுவனத்திற்கும் அண்மையில் FSSAI நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது

Advertisement