LOADING...
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்திய வருகை: ரஃபேல் முதல் AI வரை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வந்தடைந்தார்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்திய வருகை: ரஃபேல் முதல் AI வரை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது

எழுதியவர் Venkatalakshmi V
Feb 17, 2026
08:46 am

செய்தி முன்னோட்டம்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், மூன்று நாள் அரசுமுறை பயணமாக திங்கள்கிழமை இரவு மும்பை வந்தடைந்தார். அவருடன் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரானும் வருகை தந்துள்ளார். மும்பை விமான நிலையத்தில் அவர்களை மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்ய தேவ்வ்ரத் மற்றும் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் ஆகியோர் வரவேற்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டிற்கு பிறகு மேக்ரான் இந்தியா வரும் நான்காவது முறை இதுவாகும். பாதுகாப்பு, விண்வெளி, சிவில் அணுசக்தி மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற துறைகளில் ஏற்கனவே வலுவாக உள்ள இருநாட்டு உறவை, இந்த வருகை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளின் மூலோபாயக் கூட்டுறவை இது மேலும் உறுதிப்படுத்தும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

முக்கிய நிகழ்வுகள்

முக்கிய நிகழ்வுகள் மற்றும் சந்திப்புகள்

மும்பையில் இன்று நடைபெறும் இருதரப்பு சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் மேக்ரானும் இணைந்து 'இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு 2026'-ஐ முறைப்படி தொடங்கி வைக்கின்றனர். மும்பை ராஜ் பவனில் நடைபெறும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்வு, தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெறும் புத்தாக்க மன்றக் கூட்டம் மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் இரு தலைவர்களும் பங்கேற்கின்றனர். 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் 114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது குறித்த முக்கிய ஒப்பந்தம் மற்றும் ஹெலிகாப்டர்கள், 'ஹேமர்' ஏவுகணைகளை இரு நாடுகளும் இணைந்து தயாரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்தப் பயணத்தின் முக்கிய அங்கமாக, டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் 'India AI Impact Summit-இல் மேக்ரான் பங்கேற்கிறார்.

Advertisement