
அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா
செய்தி முன்னோட்டம்
அசாமில் குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி கௌஹாத்தி உயர் நீதிமன்றத்திடம் துளைக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் படி, அசாம் மாநிலத்தில் 20-24 வயதுக்குட்பட்ட 31.8 சதவீதம் பெண்கள், 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர். இது தேசிய விகிதமான 23.3 சதவீதத்தை விட அதிகமானதாகும்.
இதனால், சில நாட்களுக்கு முன், குழந்தை திருமணங்களைத் தடுப்பதற்கு அசாம் அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்தது.
14 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு திருமணம் செய்து வைக்கும் குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்திருந்தார்.
அதன்படி 3000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு தற்காலிக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா
எதுக்கு வேண்டுமானாலும் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கலாமா: உயர்நீதிமன்றம் காட்டம்
மேலும், பல குடும்ப தலைவர்கள் கைது செய்யப்பட்டதால், வேலைக்கு செல்லாத பெண்களின் நிலை மோசமானது. இதனால் பலர் போராட்டத்தில் இறங்கினர்.
போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு முன்-ஜாமீன் வழங்கிய கௌஹாத்தி உயர்நீதிமன்றம், நேற்று(பிப்-14), இவை காவலில் விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் அல்ல என்று குறிப்பிட்டது.
இந்த விசாரணையின் போது, "எதுக்கு வேண்டுமானாலும் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கலாமா? இங்கே எதற்கு போக்சோ-சட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது?" என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும், "இதில் பலாத்கார குற்றச்சாட்டு உள்ளதா?" என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இப்படி பட்ட வழக்குகளைக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இப்படி கைது செய்வதால் பல குடும்பங்கள் பாதிக்கப்டுகின்றன என்றும் கூறியுள்ளனர்.