
கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்றைய(நவ.,30) நிலவரப்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே போல் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகும் புயலானது வரும் டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் ஆந்திரா-வட தமிழகம் இடையே நிலவக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மழை
43 கி.மீ., தூரத்திற்கு சூறாவளி காற்று வீசக்கூடும்
அதன் காரணமாக டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதி உள்ளிட்ட 2 நாட்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மணிக்கு 43 கி.மீ., தூரத்திற்கு சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவரான பாலச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே நாளை(டிச.,1) தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
முக்கிய எச்சரிக்கை
#JUSTIN "மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தல்" #ChennaiRains #tnrain #WeatherUpdate #Balachandran #News18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/xk7fLe18XS
— News18 Tamil Nadu (@News18TamilNadu) November 30, 2023