Page Loader
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை - அரசாணை  வெளியீடு
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை - தமிழக அரசாணை

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை - அரசாணை  வெளியீடு

எழுதியவர் Nivetha P
Jul 01, 2023
11:49 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலத்தின் மனித வள மேலாண்மைத்துறை 2021-22ம்ஆண்டிற்கான மானியக்கோரிக்கை குறித்து நிதி மற்றும் மனித-வள மேலாண்மைத்துறை அமைச்சர் உரையாற்றினார். அப்போது, வேலைவாய்ப்பகங்கள் மூலம் தமிழக அரசு பணிகளுக்கு ஆட்கள் எடுக்கும்பொழுது, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று உத்தரவிட்டார். இதற்கான அரசாணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த இளைஞர்களுக்கும், தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் கற்றுத்தேர்ந்த நபர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இதுவரை பட்டதாரிகளே இல்லா குடும்பத்தில் இருந்து 2010-2011ம் கல்வியாண்டு முதல் ஒற்றைச்சாளரமுறைப்படி தொழிற்கல்விப்பயில தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சாதிப்பாகுபாடு ஏதுமின்றி வருமானத்தினை கணக்கில் எடுத்துக்கொள்ளாத வகையில் அரசு பணியிடங்களில் இடம்பெற முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

தமிழ்வழி கல்வி பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை