குஜராத் மாநில போதட் ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலில் தீ விபத்து
குஜராத் மாநிலத்தில் உள்ள போதட் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் ஏராளமான புறநகர் ரயில்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து அகமதாபாத் செல்லும் புறநகர் ரயில் ஒன்று தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென அந்த ரயிலில் தீ பரவ துவங்கி தீ விபத்து சற்றுமுன்னர் ஏற்பட்டுள்ளது. அகமதாபாத் புறப்படவிருந்த அந்த பயணிகள் ரயிலில் ஏற்பட்ட இந்த தீ விபத்து பெரும் பரபரப்பினை அப்பகுதியில் ஏற்படுத்தியது. இதன் முதல்கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.