LOADING...
தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாகிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு pc: தி ஹிந்து

தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாகிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
May 13, 2025
07:46 am

செய்தி முன்னோட்டம்

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இன்று (மே 13) கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. காலை 11 மணிக்குள் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளதாகவும், தண்டனை விவரங்கள் நண்பகல் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடூரம், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றது. கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்கள் மோசடி மூலம் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொடுமை செய்யப்பட்டதுடன், அவற்றை வீடியோவாக பதிவு செய்து மிரட்டல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வீடியோக்கள் வெளிவந்ததுடன், சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வழக்கு

CBI விசாரணையை மேற்கொண்டது, 9 பேர் கைது

இந்த வழக்கினை CBI கையில் எடுத்து விசாரிக்க தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்த்குமார், மணிவண்ணன், பாபு, ஹெரன்பால், அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக கோவை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனியறையில் 'இன்கேமரா' முறையில் நடை பெற்றது. சாட்சி விசாரணை மற்றும் இருதரப்பின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், மஹிளா கோர்ட் நீதிபதி நந்தினிதேவி இன்று தீர்ப்பு வழங்குகிறார். தண்டனை பெறவுள்ள அனைவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கோவை நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். இதற்காக நீதிமன்ற வளாகம் முழுவதும் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post