Page Loader
உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு - கருப்பட்டி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி 
உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு - கருப்பட்டி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு - கருப்பட்டி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி 

எழுதியவர் Nivetha P
Oct 06, 2023
04:28 pm

செய்தி முன்னோட்டம்

உலக புகழ்பெற்ற கருப்பட்டி, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் அருகே உடன்குடியில் உற்பத்தி செய்யப்படுகிறது. உடன்குடியிலுள்ள பனை விவசாயச்சங்கம் மற்றும் உடன்குடி பனங்கற்கண்டு, பனைக்கருப்பட்டி நல அமைப்பினரின் தொடர் முயற்சியால் இங்கு தயாரிக்கப்படும் கருப்பட்டியின் தரத்தினை அறிந்திட உணவு பாதுகாப்பு துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது உடன்குடி கருப்பட்டிக்கு அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இத்தகைய பெருமையை சேர்த்த அரசுக்கு பனை விவசாயிகள் மற்றும் கருப்பட்டி உற்பத்தியாளர்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள். மேலும் அந்த சுற்றுவட்டாரத்திலுள்ள குடும்பங்கள் அனைத்துமே இந்த பனை விவசாயத்தினை நம்பியுள்ளனர். இத்தகைய சூழலில் பருவமழை பொய்த்துப்போன நிலையில் அங்குள்ள ஆயிரக்கணக்கான பனைமரங்கள் அழியும் தருவாயிலுள்ளதால் அவற்றை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

புவிசார் குறியீடு