இந்தியாவில் அதிகரிக்கும் போலி ரூ.500 நோட்டுகள் - அதிர்ச்சி தகவல்
இந்தியாவின் ரிசர்வ் வங்கி நேற்று(மே.,30)வருடாந்திர அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, தற்போது ரூ.500 நோட்டுக்கள் அதிகளவில் போலியாக புழக்கத்தில் உள்ளதாக தெரிகிறது. இதன் எண்ணிக்கையானது 14.4% அதிகரித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்படி, 2022-23ம்நிதியாண்டில் கண்டறியப்பட்ட போலி 500.ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 91,110ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து போலி ரூ.2000 நோட்டுகளின் எண்ணிக்கையானது 9,806ஆக குறைந்துள்ளது என்றும் இந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த நிதியாண்டோடு ஒப்பிட்டு பார்க்கையில், போலி ரூ.20 நோட்டுக்கள் 8.4%மும், 10, 100 மற்றும் 2000 கள்ளநோட்டுகள் 11.6%ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து, ஒட்டுமொத்த வங்கித்துறையில் 2022-23நிதியாண்டில் மொத்த போலி ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையானது 2,30,971ல்-இருந்து 2,25,769ஆக குறைந்துள்ளது. ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ்வங்கி இந்தாண்டு ரூ.4,682.80கோடி செலவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.