Page Loader
காரியாபட்டி தனியார் கல்குவாரியில் வெடி விபத்து: 4 பேர் உடல் சிதறி பலி
இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி இறந்துள்ளனர்

காரியாபட்டி தனியார் கல்குவாரியில் வெடி விபத்து: 4 பேர் உடல் சிதறி பலி

எழுதியவர் Venkatalakshmi V
May 01, 2024
12:09 pm

செய்தி முன்னோட்டம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஒரு ஒரு தனியார் கல்குவாரியில், இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி இறந்துள்ளனர். இந்த க்ரஷரில் (கல் குவாரி) சல்லி, எம் சான்ட் போன்ற பொருட்கள் பாறைகளில் இருந்து உடைக்கப்படுகிறது. அந்த பாறைகளை பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை அந்த கிரஷரின் அருகே உள்ள ஒரு அறையில் இன்று காலை இறக்கி வைத்தபோது எதிர்பாராத விதமாக வெடிமருந்துகள் வெடித்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கூடுதலாக, விபத்து நடந்த பகுதியில் அதிகமான அளவு வெடி மருந்துகள் இருப்பதால், அந்த பகுதிக்கு தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும் அருகே செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.

embed

கல்குவாரியில் வெடி விபத்து

#WATCH | விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.. இவ்விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்!#SunNews | #Virudhunagar pic.twitter.com/MjGoFYXMMi— Sun News (@sunnewstamil) May 1, 2024