
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல்,நெஞ்சுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக புனேவில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
89 வயதான அவர், புனேவின் பாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து, மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்ததாவது,"அவருக்கு காய்ச்சலுடன் மார்பில் சில தொற்று இருந்தது. அவரது உடல்நிலை (இப்போது) சீராக உள்ளது" என்று கூறினார்.
தற்போது முன்னாள் ஜனாதிபதி, தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அந்த அதிகாரி தெரிவித்தார்.
பிரதீபா பாட்டீல் 2007 முதல் 2012 வரை இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பணியாற்றினார். அவர் இந்தியாவின் 12வது ஜனாதிபதியாக ஆவர்.
ட்விட்டர் அஞ்சல்
பிரதிபா பாட்டீல் குணம்பெற அமைச்சர் பிராஃபுல் படேல் வாழ்த்து
Sending heartfelt prayers for the swift recovery of former President Pratibha Tai Patil, who has been hospitalized in Pune. May she find strength and healing during this challenging time.#PratibhaPatil
— Praful Patel (@praful_patel) March 14, 2024