
தமிழகத்தில் பெண்கள் உரிமை தொகை ரூ.1000 குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் 2023-24நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் கடந்த 20ம் தேதி நடந்தது.
இதனையடுத்து பட்ஜெட் தாக்கல் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
அவர் கூறியதாவது, திமுக ஆட்சியில் சொத்து வரி, பால் கட்டணம் உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி, கலால் வரி, பத்திரப்பதிவு, பெட்ரோல், டீசல் வரி வருவாயும் உயர்ந்துள்ளது.
எனினும் வருவாய் பற்றாக்குறை வெறும் ரூ.30 ஆயிரம் கோடி மட்டுமே குறைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, திமுக தேர்தல் வாக்குறுதியில் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கொடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே என்கிறார்கள். அந்த தொகையினை பெறுவதற்கான தகுதி என்னவென்றும் தெளிவாக கூறவில்லை என்று பேசியுள்ளார்.
கடன் அதிகரிப்பு
போதை பொருள் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது
பெண்கள் உரிமை தொகைக்காக பட்ஜெட்டில் ரூ.7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை வைத்து 1 கோடி பேருக்காவது அந்த தொகையை கொடுக்க முடியுமா என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறியுளளார்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி, கல்வியில் பின்னடைவு உள்ளிட்ட விஷயங்களை கண்டித்தே சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.
விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவை குறித்து விவாதிக்க அனுமதி கேட்டோம்.
அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் வெளியில் வந்துவிட்டோம்.
திமுக ஆட்சியில் 2 ஆண்டுகளில் அதிகளவு கடன் வாங்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு இதுவரை ரத்து செய்யப்படவில்லை.
எங்கு பார்த்தாலும் போதை பொருள் விற்பனை நடக்கிறது.
இதனால் இளைஞர்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்துவருகிறது என்று குற்றசாட்டுகளை அவர் முன்னெடுத்துவைத்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.