Page Loader
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாவிடில் மின்சாரம் துண்டிக்கப்படும் என பரவும் தகவல் - மின்சார வாரியம் விளக்கம்

எழுதியவர் Nivetha P
Mar 03, 2023
05:01 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் கடந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை நீங்கள் செலுத்தவில்லை எனவே இன்று(மார்ச்.,3) இரவு 10.30மணி முதல் உங்கள் மின்இணைப்பு துண்டிக்கப்படும் என்று பலரது செல்போன்களுக்கு குறுஞ்செய்திகள் வந்திருக்கிறது என்று ஓர் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்த விளக்கத்தினை மின்சாரவாரியம் தற்போது அளித்துள்ளது. அதன்படி, இதுபோன்ற குறுஞ்செய்திகளில் பெயர், மின்இணைப்பு எண் போன்ற எவ்வித தகவலும் இருக்காது. மேலும் தகவல்களுக்கு அணுகவும் என 06201314601 என்னும் எண் கொடுக்கப்பட்டிருக்கும். இது போலியான செய்தி, பெயர் தெரியாத நம்பரில் இருந்து மின்நுகர்வோருக்கு அனுப்பப்படுகிறது. எனவே இதுகுறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ட்விட்டர் பக்கத்தில் ஒரு பயனர் இதுகுறித்து பதிவிட்டு, இது முறையற்ற செய்தி என்றால், இதனை எவ்வாறு தடுப்பது? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்தாவிடில் மின்சாரம் துண்டிக்கப்படும் என பரவும் தகவல் போலியானது