Page Loader
திருமங்கலம் மெட்ரோ பயணிகளுக்காக மினி பஸ் மற்றும் மின்சார ஆட்டோ சேவை அறிமுகம் 
மெட்ரோ பயணிகளுக்காக மினி பஸ் மற்றும் மின்சார ஆட்டோ சேவை அறிமுகம்

திருமங்கலம் மெட்ரோ பயணிகளுக்காக மினி பஸ் மற்றும் மின்சார ஆட்டோ சேவை அறிமுகம் 

எழுதியவர் Nivetha P
Jun 30, 2023
05:19 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் மெட்ரோ ரயில்சேவை பெரும்பாலான இடங்களில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், ஏராளமான மக்கள் இதில் தினந்தோறும் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மெட்ரோ ரயில் சேவை மிகவசதியாக கருதப்படுவதால், 2ம்கட்ட மெட்ரோ ரயில்களுக்கான கட்டுமானப்பணிகளும் தற்போது சென்னையில் நடந்துவருகிறது. இந்நிலையில் மெட்ரோ பயணிகளின் வசதிகளை படிப்படியாக ரயில்நிலையங்களில் அதிகரித்து வருகிறது. அதன்படி சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில்நிலையத்திலிருந்து 10 கிமீ.,சுற்றளவிலுள்ள பயணிகளுக்கு மின்சார ஆட்டோ சேவையானது துவங்கப்பட்டுள்ளது. அதேபோல் மாநகரப்போக்குவரத்து கழகத்தின் மினிபஸ் சேவையும் திருமங்கல மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கொரட்டூர், செனாய்நகர் அண்ணாநகர் மேற்கு பணிமனை, தியாகராயநகர், பாடி சரவணாஸ்டோர்ஸ் பக்தவச்சலம் மெமோரியல் மகளிர் கல்லூரி உள்ளிட்ட வழித்தடங்களில் இயங்கவுள்ளது. மின்சார ஆட்டோவில் பயணிப்போருக்கு ஒரு கிலோ.மீ.தூரத்திற்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

சிறப்பு மினிபஸ் மற்றும் ஆட்டோ சேவை