Loading...
2029 முதல் 'ஒரே நாடு ஒரே தேர்தல்'? தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனை
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் குறித்து, தேர்தல் ஆணையம், தனது விளக்கத்தை அளித்துள்ளது

2029 முதல் 'ஒரே நாடு ஒரே தேர்தல்'? தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 16, 2026
07:47 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, இந்தியத் தேர்தல் ஆணையம், தனது விளக்கத்தை அளித்துள்ளது. இத்திட்டம் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் தலைவர், பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் இதுகுறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார். நாடாளுமன்றக் குழுவிடம் தேர்தல் ஆணையம் சமர்ப்பித்துள்ள முதற்கட்ட அறிக்கையின்படி, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த தங்களுக்கு 6 மாத கால முன்கூட்டிய அறிவிப்பு தேவை என்று தெரிவித்துள்ளது.

அவகாசம்

6 மாத கால அவகாசம் கோரிய தேர்தல் ஆணையம்

வரும் 2028 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டம் இயற்றப்பட்டால், தேர்தல் ஆணையத்திற்கு 6 மாத கால அவகாசம் கிடைக்கும் பட்சத்தில், 2029 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தத் தாங்கள் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து பி.பி. சௌதரி கூறுகையில், "ஒரே நேரத்தில் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்த எங்களுடைய சந்தேகங்களை அவர்களிடம் முன்வைத்து, அவர்களின் முழுமையான விளக்கத்தைப் பெற்ற பின்னரே, இத்திட்டம் சாத்தியமா இல்லையா என்பது குறித்த இறுதிப் பரிந்துரையை நாடாளுமன்றக் குழு முடிவு செய்யும்" என்றார்.

தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT