Page Loader
பென்ஷன் வாங்குவதற்கு வரிசையில் நின்ற முதியவர் பலி!
பென்ஷன் திட்டம் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டதில் இருந்து சிரமப்படும் முதியவர்கள்(படம்: India Times)

பென்ஷன் வாங்குவதற்கு வரிசையில் நின்ற முதியவர் பலி!

எழுதியவர் Sindhuja SM
Dec 21, 2022
06:16 pm

செய்தி முன்னோட்டம்

காஷ்மீர் பந்திபோராவில் உள்ள மலங்கம் பகுதியைச் சேர்ந்த சோனாவுல்லா பட் என்ற முதியவர் நேற்று காலை தாலுகா சமூக நல அலுவலகத்தில், ஓய்வூதிய ஆவணங்களை சமர்பிப்பதற்காக காத்திருந்தபோது உயிரிழந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில் ஓய்வூதியத் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறி இருக்கின்றனர். இதனையடுத்து, அந்த ஆவணங்களை சமர்ப்பிக்க சென்ற 62 வயது சோனாவுல்லா பட் அதற்காக காத்திருக்கும் போதே உயிரிழந்துள்ளார். இவர் திடீர் என்று இறந்துவிட்டதால் எதனால் இறந்தார் என்பது சரியாக தெரியவில்லை என்கின்றனர் அதிகாரிகள்.

பென்ஷன்

"மனிதாபிமானத்தோடு நடக்க வேண்டும்!"

தனது பழைய பென்ஷன் தகுதியை சரிபார்ப்பதற்கு அதிகாரிகள் அழைத்ததால் இந்த முதியவர் அங்கு சென்றிருக்கிறார். இவர் பென்ஷனுக்கு என்ன ஆகுமோ என்ற பதட்டத்தில் நேற்று அலுவலக நேரம் ஆரம்பிக்கும் முன்பே அங்கு சென்று காந்திருந்ததாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. மேலும், காஷ்மீர் குளிரில் பல முதியவர்கள் இதற்காக இப்படி காத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அதிகாரிகளுக்கு காத்திருக்கும் போது இவர் உயிரிழந்ததால் இந்த விஷயத்தை காஷ்மீர் அரசியல்வாதிகள் விமர்சித்து வருகின்றனர். பென்ஷன் திட்டம் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டதில் இருந்து வயோதிகர்கள் பலர் ஆன்லைனுக்கு மாற்றுவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். இதைக் கண்டித்த அங்குள்ள அரசியல் கட்சிகள் "மனிதாபிமானத்தோடு நடக்க வேண்டும்! முதியவர்களுக்கு ஏற்ற ஒரு முறையை நிர்வாகம் பின்பற்ற வேண்டும்!" என்று கூறியுள்ளனர்.