எடப்பாடியை அங்கீகரிக்க கூடாது - ஓபிஎஸ் சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு
செய்தி முன்னோட்டம்
அதிமுக கட்சியின் பொது செயலாளராக எடப்பாடி கே. பழனிச்சாமி பல வழக்குகளுக்கு பிறகு தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளார்.
எனினும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் அவர்களும், அவரது ஆதரவாளர்களும் தனித்தனியாக நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்கள்.
இந்த வழக்கின் விசாரணை வரும் 20ம் தேதி நடக்கவுள்ளது.
இந்நிலையில் எடப்பாடி கே பழனிச்சாமியை அதிமுக பொது செயலாளராக அங்கீகரிக்கக்கூடாது என்று இந்திய தேர்தல்ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சட்டவிதிகள் திருத்தும் தொடர்பாக 10 நாட்களில் முடிவுஎடுக்கப்படும் என்று தேர்தல்ஆணையம் நேற்று(ஏப்ரல்.,12) அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த மனுவினை புகழேந்தி இன்று(ஏப்ரல்.,13) தேர்தல்ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் சிவில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக முடிவு எடுக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
Embed
Twitter Post
"அங்கீகரிக்க கூடாது"#ADMK | #OPS | #ElectionCommission | @OfficeOfOPS | @AIADMKOfficial | @EPSTamilNadu | #News7Tamil pic.twitter.com/DUl1MYvchU— News7 Tamil (@news7tamil) April 13, 2023 "அங்கீகரிக்க கூடாது"#ADMK | #OPS | #ElectionCommission | @OfficeOfOPS | @AIADMKOfficial | @EPSTamilNadu | #News7Tamil pic.twitter.com/DUl1MYvchU— News7 Tamil (@news7tamil) April 13, 2023