NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டி
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டி

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டி

    எழுதியவர் Nivetha P
    Jan 23, 2023
    11:39 am

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததையடுத்து, அப்பகுதியில் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது.

    இதில் போட்டியிட அனைத்து கட்சிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியினரே இதில் போட்டியிடுவார்கள் என்று ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தது.

    இதனையடுத்து வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

    இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு

    இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    அதன்படி, இந்த இடைத்தேர்தலில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட கட்சி மேலிடம் வாய்ப்பு அளித்துள்ளது.

    இதனை மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், காங்கிரஸ் தலைமை தன் மீது நம்பிக்கை வைத்து தன்னை வேட்பாளராக அறிவித்துள்ளது என்றும் தலைமையின் முடிவை ஏற்பதாகவும் கூறியுள்ளார்.

    மேலும், தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.

    முன்னதாக, தான் இந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், தன் இளைய மகன் சஞ்சைக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தேர்தல்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! குஜராத்
    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு இந்தியா
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம் இந்தியா

    தமிழ்நாடு

    பொங்கல் பெருவிழா அழைப்பிதழில் 'தமிழக ஆளுநர்' என அச்சிடப்பட்டுள்ளது: மீண்டும் சர்ச்சை பொங்கல் திருநாள்
    திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பொங்கல் கருணைத்தொகையும் அறிவிப்பு மு.க ஸ்டாலின்
    புத்தக கண்காட்சி: சிறைவாசிகளுக்கு தானம் கொடுக்கலாம் சென்னை
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025